கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாககிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு அமைய நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் நுவரெலியா பெரிய வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
குறித்த வேலைத் திட்டங்களை பார்வையிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்..
இவர்களுடன் ¸வைத்திய உயரதிகாரிகள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட சில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மேலும் அபிவிருத்தி செய்து கூடிய விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.



